Total Pageviews

Friday, October 15, 2010

ரேஷன் கடையில் ஸ்டாக் உள்ளதா? sms அனுப்பினால் தெரிந்துவிடும்

ரேஷன் கடையில் ஸ்டாக் உள்ளதா? sms அனுப்பினால் தெரிந்துவிடும்


விக்கிற விலைவாசியை சமாளிக்க ரேஷன் கடையில போயி கால் கடுக்க காத்துக்கிடந்து பொருட்கள் கேட்டா ஸ்டாக் தீர்ந்து போச்சுன்னு கைய விரிச்சா எப்படி இருக்கும் நமக்கு?

உண்மையிலேயே ரேஷன் கடையில் பொருட்கள் தீர்ந்துவிட்டதா இல்ல வச்சுக்கிட்டே வஞ்சகம் பண்றாங்களா? என்பதை அறிய இனி ஒரு sms அனுப்பினால் போதும் உண்மை நிலவரம் தெரிந்துவிடுமாம்.

முதலில் Pds என டைப் செய்து இடைவெளி விட்டு, மாவட்டகுறியீட்டு எண்ணை டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் பகுதி ரேஷன் கடை எண்ணை டைப் செய்து 9789006492மற்றும் 9789005450 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் உடனடியாகஇருப்பு விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம்வந்து விடும்.

மாவட்ட குறியீட்டு எண், ரேஷன் கடை எண் ஆகியவை ரேஷன் கார்டிலேயே இருக்கிறது. கார்டில் மேல்பகுதியில் 11 இலக்கம் கொண்ட எண் உள்ளது. இதில் ஆங்கில எழுத்துக்கு முன்புள்ள 2 எண்கள் மாவட்ட குறியீட்டு எண். கடை எண் ரேஷன் கார்டின் கீழ்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், உப்பு, அரிசி, ரவை, கெரசின், மளிகை, பாமாயில் , சர்க்கரை, உளுந்து, துவரம் பருப்பு, கோதுமை ஆகியவற்றின் ஸ்டாக் விவரங்களை அறியலாம்.மக்கள் இம்முறையை அதிகமாக பயன்படுத்தினால், முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப் படலாம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.